சென்னையில் எம்.எல்.ஏ.-க்கள் தங்கும் விடுதியில் பறக்கும் படையினர் திடீர் சோதனை
சென்னையில் எம்.எல்.ஏ. -க்கள் தங்கும் விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் தங்கும் விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சி.பிளாக் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பறக்கும் படையினர் சோதனை செய்து வருகின்றனர்.
பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சோதனை நடைப்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் பறக்கும் படையைச்சேர்ந்த 5 அதிகாரிகள் சி பிளாக்கில் உள்ள 10-வது மாடியில் சோதனை நடத்துகின்றனர். தேர்தல் பறக்கும் படையினருடன் இணைந்து போலீசாரும் சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனை நடைபெறும் இடத்தில் ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை.
Related Tags :
Next Story