தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி


தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது  : முதல்வர் எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 19 April 2019 11:49 AM IST (Updated: 19 April 2019 11:49 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணிக்கு, வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

நிருபர்களுக்கு  பேட்டி அளித்தபோது முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக இந்த முறை அதிக வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். வரும் தேர்தலில் இதே கூட்டணி தொடர அதிக வாய்ப்புள்ளது.

நேற்று பல இடங்களில் சூறை காற்று வீசியதால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் அதிகாரிகளுடன் நாங்கள் தற்போது ஆலோசனை நடத்த முடியாது என்று கூறினார்.

Next Story