நாளை முதல் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம்: வானிலை ஆய்வு மையம்


நாளை முதல் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம்: வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 24 April 2019 8:01 AM GMT (Updated: 24 April 2019 8:14 AM GMT)

நாளை முதல் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை,

தமிழகத்தின் பல இடங்களிலும் கோடை மழை ஆங்காங்கே பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையானது, தொடர்ந்து 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

மேலும்,இந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமானது, தொடர்ந்து 48 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நாளை முதல் தென்மேற்கு வங்கடல் பகுதி, இந்திய பெருங்கடல், இலங்கை கடல்பகுதியில் 30-40 கிமீ வேகத்தில் காற்று வீச கூடும் எனவும், நாளை மறுநாள் மற்றும் 27-ஆம் தேதி 40-50 கிமீ காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது.

நாளை முதல் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும் இலங்கை கடற்கரை பகுதிகளுக்கும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Next Story