வடதமிழகம் மற்றும் கிழக்கு ஆந்திராவில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்


வடதமிழகம் மற்றும் கிழக்கு ஆந்திராவில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 26 April 2019 8:10 AM GMT (Updated: 26 April 2019 10:34 AM GMT)

வடதமிழகம் மற்றும் கிழக்கு ஆந்திராவில் ஏப்.30 மற்றும் மே 1-ம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. #HeavyRain

சென்னை,

வடதமிழகம் மற்றும் கிழக்கு ஆந்திராவில் ஏப்.30 மற்றும் மே 1-ம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:- “ காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது சென்னையின் தென்கிழக்கே 1490 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு  தென்மேற்கே 1760 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது .

அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 30-ம் தேதி வடதமிழகம் மற்றும் கிழக்கு ஆந்திர கடல்பகுதியை நெருங்கும். வடதமிழகம் மற்றும் கிழக்கு ஆந்திராவில் ஏப்.30 மற்றும் மே 1-ம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றவர்கள் வரும் 28-ம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Next Story