மாநில செய்திகள்

செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழப்பு + "||" + nurses saw childbirth and child death

செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழப்பு

செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழப்பு
விருதுநகரில் மருத்துவர் இல்லாமல் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்ததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்

விருதுநகரில் மருத்துவர் இல்லாமல் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்ததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மஞ்சள்  ஓடைப்பட்டியை  சேர்ந்த முனீஸ்வரிக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவரை உறவினர்கள் அனுமதித்தனர்.

மருத்துவர் இல்லாத நிலையில், செவிலியர்கள் பிரசவம் பார்த்தபோது, குழந்தை உயிரிழந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், சுகாதார நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தை அடுத்து முனீஸ்வரி உறவினர்கள் கலைந்து சென்றனர்.