திமுக, அமமுக கூட்டணி என்று நாங்கள் கூறியது இப்போது உண்மையாகி விட்டது - தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
திமுக, அமமுக கூட்டணி என்று நாங்கள் கூறியது இப்போது உண்மையாகி விட்டது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
மக்கள் எனக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். நிச்சயமாக தூத்துக்குடியில் வெற்றி பெறுவேன். திமுக, அமமுக கூட்டணி என்று நாங்கள் கூறியது இப்போது உண்மையாகி விட்டது. மறைமுகமாக திமுகவுடன், தினகரன் கூட்டணி வைத்துள்ளார்.
வாக்குப்பதிவு இயந்திர மைய அறைகளில் தவறுகள் நடைபெறக்கூடாது. திமுகவின் பழைய கதைகளை எல்லாம் தோண்டினால் ஸ்டாலினால் திண்ணை பிரசாரத்திற்கு கூட செல்ல முடியாது.
தமிழர்கள் பிரதமர் ஆவதை தடுத்தது திமுகதான். அப்துல்கலாம் மீண்டும் ஜனாதிபதியாக ஆவதை தடுத்தது திமுக தான். மூப்பனார் போன்றவர்கள் பிரதமர் ஆவதை தடுத்தது திமுக தான். திமுக என்றாலே நாடக அரசியல் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story