சுதந்திர போராட்ட வீரர் கட்டபொம்மனுக்கு சிலை; கோரிக்கையை அரசு பரிசீலிக்கும்: முதல் அமைச்சர் பழனிசாமி


சுதந்திர போராட்ட வீரர் கட்டபொம்மனுக்கு சிலை; கோரிக்கையை அரசு பரிசீலிக்கும்:  முதல் அமைச்சர் பழனிசாமி
x

சுதந்திர போராட்ட வீரர் கட்டபொம்மனுக்கு சிலை வைக்க வேண்டுமென்ற கோரிக்கையை அரசு பரிசீலனை செய்யும் என முதல் அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

அரவக்குறிச்சி,

தமிழக சட்டசபைக்கான சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19ந்தேதி நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு அரவக்குறிச்சி தொகுதியின் வெஞ்சமாங்கூடலூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டார்.

அவர் பேசும்பொழுது, அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள குளங்கள், ஏரிகள் தூர் வாரப்பட்டு இங்குள்ள மக்களுக்கு நிலையாக தண்ணீர் கிடைக்க செய்வோம்.  இப்பகுதியில் உயர்மட்ட பாலம் மற்றும் முருங்கைக்காய் குளிர்ப்பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவோம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி அளித்துள்ளார்.  5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியவர் செந்தில் பாலாஜி.  சுதந்திர போராட்ட வீரர் கட்டபொம்மனுக்கு சிலை வைக்க வேண்டுமென்ற கோரிக்கையை தமிழக அரசு பரிசீலனை செய்யும் என்று அவர் பேசியுள்ளார்.

Next Story