அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்


அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 16 May 2019 2:44 PM IST (Updated: 16 May 2019 2:44 PM IST)
t-max-icont-min-icon

அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-

அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

தென் தமிழகத்தின் வளிமண்டலத்தில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்த வரையில் வானம் மேகமூட்டத்துடனும், மாலையில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Next Story