4 தொகுதி இடைத்தேர்தலில் 1 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்: 47% வாக்குகள் பதிவு - சத்யபிரதா சாகு


4 தொகுதி இடைத்தேர்தலில் 1 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்: 47% வாக்குகள் பதிவு - சத்யபிரதா சாகு
x
தினத்தந்தி 19 May 2019 8:54 AM GMT (Updated: 19 May 2019 8:54 AM GMT)

4 தொகுதி இடைத்தேர்தலில் அரவக்குறிச்சியில் தான் அதிக அளவில் வாக்குகள் பதிவாகி வருகிறது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.


சென்னை,

தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது:-

அரவக்குறிச்சி தொகுதியில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. 4 தொகுதிகளில் அரவக்குறிச்சியில் தான் அதிக அளவில் வாக்குகள் பதிவாகி வருகிறது. 4 தொகுதி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி, பதிவான வாக்குப்பதிவு சராசரியாக 47% வாக்குகள் பதிவாகி உள்ளது.

சூலூர் - 48.04%, அரவக்குறிச்சி - 52.68%, திருப்பரங்குன்றம் - 47.09%, ஒட்டப்பிடாரம் - 45.06% வாக்குகள் பதிவாகி உள்ளது. மறு வாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளில் 1 மணி நிலவரப்படி 51.21% வாக்குகள் பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story