மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்ற கிளை


மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்ற கிளை
x
தினத்தந்தி 20 May 2019 11:18 AM IST (Updated: 20 May 2019 11:18 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனுக்கு, மதுரை உயர்நீதிமன்ற கிளை நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது.

சென்னை,

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனத் தேர்தல் பிரசாரத்தின் போது, கமல்ஹாசன் கூறியது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து கமல்ஹாசன் மீது நடவடிக்கை கோரி, இந்து முன்னணி நிர்வாகி அளித்த புகாரின்போரில், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இதையடுத்து தமக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்திவைத்து இருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த ஐகோர்ட் மதுரை கிளை, கமல்ஹாசனுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.

Next Story