வேறு இயக்கத்திற்கு நான் செல்லப்போவதாக தவறான செய்தி பரப்பப்படுகிறது! - தோப்பு வெங்கடாசலம்


வேறு இயக்கத்திற்கு நான் செல்லப்போவதாக தவறான செய்தி பரப்பப்படுகிறது! - தோப்பு வெங்கடாசலம்
x
தினத்தந்தி 22 May 2019 7:18 AM GMT (Updated: 2019-05-22T12:48:24+05:30)

வேறு இயக்கத்திற்கு நான் செல்லப்போவதாக தவறான செய்தி பரப்பப்படுகிறது! என தோப்பு வெங்கடாசலம் கூறினார்

ஈரோடு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாகவும், மாநில ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளராகவும் இருப்பவர் தோப்பு வெங்கடாசலம். இவர்  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு சென்று   தனது கட்சி பதவியை ராஜினாமா செய்வது தொடர்பான கடிதத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவர்கள் இருவரும் ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் இன்று தோப்பு வெங்கடாசலம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர கூறியதாவது;-
சொந்த காரணங்களால் கட்சி பதவியில் இருந்து விலகுவதாக கூறி தான் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தேன். 

முதல்வர்- துணை முதல்வர் எனக்கு தகுந்த மரியாதை தருகின்றனர். வேறு இயக்கத்திற்கு நான் செல்லப்போவதாக தவறான செய்தி பரப்பப்படுகிறது. அ.தி.மு.க.விலேயே தான் இருக்கிறேன்.
அ.தி.மு.க.வுக்கு விஸ்வாசமாக இருப்பது போல் மக்களுக்கும் விஸ்வாசமாக இருக்கிறேன் என கூறினார்.


Next Story