குடிநீர் பிரச்சினை: ஆக்கப்பூர்வ நடவடிக்கையில் முதலமைச்சர் பழனிசாமி ஈடுபட வேண்டும் - மு.க.ஸ்டாலின்


குடிநீர் பிரச்சினை: ஆக்கப்பூர்வ நடவடிக்கையில் முதலமைச்சர் பழனிசாமி ஈடுபட வேண்டும்  -  மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 14 Jun 2019 3:29 PM GMT (Updated: 14 Jun 2019 3:29 PM GMT)

தமிழக மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஆக்கப்பூர்வ நடவடிக்கையில் முதலமைச்சர் பழனிசாமி ஈடுபட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
தமிழக மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஆக்கப்பூர்வ நடவடிக்கையில் முதலமைச்சர் பழனிசாமி ஈடுபட வேண்டும்.

தண்ணீர் பிரச்சினையில் அலட்சியமாக இருக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். 

தண்ணீர் பிரச்சினைக்கு உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் உரிய பதில் இல்லை. உள்ளாட்சித்துறை அமைச்சரின் தோல்விதான் மக்கள் குடிநீருக்கு அலையும் கொடுமைக்கு காரணம்.

புதிய மெகா கூட்டுக்குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

மழை பற்றாக்குறை இருப்பது தெரிந்தும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் நிறைவேற்றப்படாமல் இருப்பது ஏன்?  கிருஷ்ணா நதி நீரை பெற ஆந்திர முதல்மந்திரியை சந்திக்க எஸ்.பி.வேலுமணி முயற்சிக்கவில்லை. 

மக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியை திமுகவினர் மேலும் முனைப்புடன் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story