சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தது


சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தது
x
தினத்தந்தி 16 Jun 2019 1:19 AM GMT (Updated: 16 Jun 2019 3:10 AM GMT)

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று குறைந்தது.

சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்பட்டு வந்தன.  மாதம் இருமுறை அவற்றின் விலை மாற்றியமைக்கப்பட்டது.  சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த இந்த நடைமுறை கைவிடப்பட்டு பின்னர் தினந்தோறும் என்ற அடிப்படையில் பெட்ரோல், டீசல் விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு இவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றது.  இவற்றில், பெட்ரோல் விலை ரூ.85க்கும் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது வாகன ஓட்டிகளுக்கு இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதன்பின் பெட்ரோல் விலை சற்று குறைய தொடங்கியது ஆறுதலை ஏற்படுத்தியது.

சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.70 ஆகவும், டீசல் விலை ரூ.67.62 ஆகவும் விற்கப்பட்டது.  தொடர்ந்து இன்றும் அவற்றின் விலை குறைந்துள்ளது.  சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 6 காசுகள் குறைந்து ரூ.72.64க்கும், டீசல் விலை 10 காசுகள் குறைந்து ரூ.67.52க்கும் விற்கப்படுகிறது.

Next Story