மாநில செய்திகள்

காவலர் தாக்கப்பட்டது தொடர்பாக மற்றொரு வீடியோ வெளியாகியுள்ளது + "||" + In connection with the assault of the guard Another video has been released

காவலர் தாக்கப்பட்டது தொடர்பாக மற்றொரு வீடியோ வெளியாகியுள்ளது

காவலர் தாக்கப்பட்டது தொடர்பாக மற்றொரு வீடியோ வெளியாகியுள்ளது
சென்னையில் கடந்த வாரம் 4 பேர் குடிபோதையில் காவலரை தாக்கியது தொடர்பாக மற்றொரு வீடியோ வெளியாகியுள்ளது.
சென்னை,

சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் காவலராக இருப்பவர் கார்த்திகேயன். கடந்த 13-ந் தேதி நுங்கம்பாக்கம் - வள்ளுவர் கோட்டம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது காரில் வந்த நான்கு பேர் மதுபோதையில் திருநங்கைகளிடம் பேசிக்கொண்டு இருந்தனர். நான்கு பேரையும் எச்சரித்து காவலர் போக சொன்னதால், தாங்கள் வழக்கறிஞர் என்றும் அதனால் போக முடியாது என்றும் காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

வாக்குவாதம் முற்றி 4 பேரும் காவலரின் லத்தியை பறித்துக் கொண்டு அவரை தாக்கினர். மேலும், வாக்கி டாக்கியையும் உடைத்தனர். இது தொடர்பான மற்றொரு காவலர் பதிவு செய்த வீடியோ காட்சி அப்போதே வெளியானது.

ஏழுகிணறு பகுதியை சேர்ந்த சுலைமான், ரிஸ்வான், ராயபுரத்தை சேர்ந்த முஹம்மது அக்பர், முகமது நவ்ஷத் ஆகிய 4 பேரையும் நுங்கம்பாக்கம் போலீசார் கடந்த 14-ம் தேதி கைது செய்தனர். இந்த நிலையில் காவலரை தாக்கியது தொடர்பான மேலும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...