தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் சொத்துகளை ஏலம் விடப்போவதாக வங்கி அறிவிப்பு


தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் சொத்துகளை ஏலம் விடப்போவதாக  வங்கி அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Jun 2019 7:14 AM GMT (Updated: 21 Jun 2019 7:14 AM GMT)

தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் சொத்துகளை ஏலம் விடப்போவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்து உள்ளது.

சென்னை,

ரூ.5,52,73,825 கடன் பாக்கிக்காக விஜயகாந்தின் சொத்துகள் ஏலம் என இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்து உள்ளது. 

விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரி, சாலிகிராமம் வீடு ஆகியவை ஏலத்தில் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ரூ.5,52,73,825 கடன், வட்டி மற்றும் இதர பாக்கிகளை வசூலிக்க விஜயகாந்தின் சொத்துகள் ஏலம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்டுள்ள ஏல அறிவிப்பில் விஜயகாந்தின் கண்ணம்மாள் தெரு வீடு இடம் பெற்றுள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவேரி தெரு மற்றும் வேதவள்ளி தெருவில் உள்ள விஜயகாந்துக்கு சொந்தமான சொத்துகள் மற்றும் ஆண்டாள் அழகர் கல்லூரியும் ஏலத்துக்கு வருவதாக அறிவித்து உள்ளது.

விஜயகாந்த் நடத்தும் ஆண்டாள் அழகர் கல்லூரியின் அறக்கட்டளைக்கு கடனாக பெற்ற தொகைக்கு சொத்துகள் அடமானம் வைக்கப்பட்டுள்ளதாக வங்கி அறிவித்து உள்ளது.

Next Story