மாநில செய்திகள்

இந்திரா காந்தியை கைது செய்த முன்னாள் டி.ஜி.பி. லட்சுமி நாராயணன் மரணம் + "||" + Former DGP Death of Lakshmi Narayanan

இந்திரா காந்தியை கைது செய்த முன்னாள் டி.ஜி.பி. லட்சுமி நாராயணன் மரணம்

இந்திரா காந்தியை கைது செய்த முன்னாள் டி.ஜி.பி. லட்சுமி நாராயணன் மரணம்
தமிழக முன்னாள் டி.ஜி.பி. வீ.ஆர்.லட்சுமி நாராயணன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
சென்னை,

தமிழக முன்னாள் டி.ஜி.பி. வீ.ஆர். லட்சுமி நாராயணன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91.  1951 ஐ.பி.எஸ். தேர்வான அவர் மதுரை மாவட்ட கூடுதல் எஸ்பியாக தனது காவல் பணியை தொடங்கினார். மத்திய பணியில் சி.பி.ஐ.யில் இணை இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.

அவசரநிலை முடிந்து அதற்குப் பின்பாக இந்திராகாந்தி தலைமையிலான அரசு தோல்வியுற்றபோது அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் உத்தரவுபடி இந்திரா காந்தியை அவரது வீட்டுக்குச் சென்று லட்சுமி நாராயணன் துணிச்சலாக கைது செய்தார்.

1985 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் டி.ஜி.பி. பொறுப்பில் இருந்து போது அவர் ஓய்வு பெற்றார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை லட்சுமி நாராயணன் உயிரிழந்தார். அண்ணா நகரில் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு காவல்துறையினர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.