நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு


நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 3 July 2019 4:01 PM IST (Updated: 3 July 2019 4:01 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம்  கூறி இருப்பதாவது:-

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள திண்டுக்கல், நீலகிரி, தேனி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 6 செ.மீ. மழையும், தேனி மாவட்டம் பெரியாறில் 4 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story