நெல்லையப்பர் கோவிலில் ஆனி தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
நெல்லையப்பர் கோவிலில் ஆனி தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
நெல்லை,
தென் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில், நெல்லை நெல்லையப்பர் கோவிலும் ஒன்று. திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய தலமும் ஆகும். இந்த கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாக்களில் ஆனி மாதம் 10 நாட்கள் நடைபெறுகின்ற தேரோட்ட திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். ஆனி திருவிழாவையொட்டி தேரோட்டமும் நடைபெறும்.
இந்த நிலையில், நெல்லையப்பர் கோவிலில் ஆனி தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 10 நாள் திருவிழாவின் 9ம் நாளான 14ந்தேதி முக்கிய நிகழ்ச்சியான ஆனி தேரோட்டம் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story