தமிழ்நாட்டில் நீதித்துறை, பத்திரிகைத்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது- முதல்வர் பழனிசாமி


தமிழ்நாட்டில் நீதித்துறை, பத்திரிகைத்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது- முதல்வர் பழனிசாமி
x
தினத்தந்தி 13 July 2019 7:03 AM GMT (Updated: 13 July 2019 7:03 AM GMT)

தமிழ்நாட்டில் நீதித்துறை, பத்திரிகைத்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது என அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி பேசினார்.

சென்னை,

சென்னை தரமணியில் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா தொடங்கியது. விழாவில் ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் பழனிசாமி, சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமாணி உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.

விழாவில்  முனைவர் பட்டம் பெற்ற  3 பேருக்கும் ஜனாதிபதி  வாழ்த்து தெரிவித்தார்.

விழாவில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-

மனுநீதி சோழனை போல சிறப்பான தீர்ப்புகளை வழங்குபவர்கள் நீதிபதிகள். தமிழ்நாட்டில் நீதித்துறை, பத்திரிகைத்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. 

நீதிக்கு தலைவணங்கும் மாநிலம் தமிழகம்.  நீதிமன்றம், பத்திரிகை உள்ளிட்டவை சுதந்திரமாக செயல்படுகிறது. நீதி, நேர்மையை சிறப்பாக கடைபிடிக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.  சட்ட பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  தமிழகத்தில் சட்டக்கல்லூரிகளை மேம்படுத்த உரிய நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 3 புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்கப்படும் என கூறினார்.

Next Story