மாநில செய்திகள்

அங்கன்வாடி மையங்களில் பணியாற்றினால் கவுரவ குறைச்சலா? இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிபதி கேள்வி + "||" + In Anganwadi centers Is there a lack of dignity if served? Judge question for intermediate teachers

அங்கன்வாடி மையங்களில் பணியாற்றினால் கவுரவ குறைச்சலா? இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிபதி கேள்வி

அங்கன்வாடி மையங்களில் பணியாற்றினால் கவுரவ குறைச்சலா? இடைநிலை ஆசிரியர்களுக்கு  நீதிபதி கேள்வி
அங்கன்வாடி மையங்களில் பணியாற்றினால் கவுரவ குறைச்சலா? என்று இடைநிலை ஆசிரியர்களுக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,

இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிகளில் நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில்  தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சமீபகாலமாக அரசின் முடிவுகளை எதிர்த்து ஆசிரியர்கள் வழக்குத் தொடர்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இது வேதனையாக உள்ளது.  அங்கன்வாடி மையங்களில் பணியாற்றினால் கவுரவ குறைச்சலா? என்று வழக்குத் தொடர்ந்த பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பார்த்திபன் கேள்வி எழுப்பினார்.

அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கியுள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார். ஏழை, எளிய பெற்றோர்கள் பயனடையும் வகையில் அரசு எல்.கே.ஜி., யு.கே.ஜி. துவங்கியுள்ளது வரவேற்கத்தக்கது என நீதிபதி கூறியுள்ளார்.