உலக கோப்பையில் இங்கிலாந்து வென்றது போல் அதிமுக வெற்றி பெறும் - அமைச்சர் ஜெயக்குமார்


உலக கோப்பையில் இங்கிலாந்து வென்றது போல் அதிமுக வெற்றி பெறும் - அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 15 July 2019 5:15 AM GMT (Updated: 15 July 2019 5:15 AM GMT)

உலக கோப்பையில் இங்கிலாந்து எப்படி வெற்றி பெற்றதோ அதேபோல் வரும் தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை,

பெருந்தலைவர் காமராசரின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாபா பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த  அமைச்சர் ஜெயக்குமார்  கூறியதாவது:-

உலக கோப்பையில் இங்கிலாந்து தோற்பது போல் ஒரு தோற்றம் இருந்தது, ஆனால் நியூசிலாந்து தோற்றுவிட்டது.  அதேபோல் அரசியலில் திமுக ஜெயிப்பது போல் மாயை இருந்தாலும் இறுதியில் இங்கிலாந்தை போல் அதிமுக வெல்லும்,  நியூசிலாந்து போல திமுக தோற்கும் என்றார். திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் நாடாளுமன்றத்தில் தூங்கியதாகவும் கூறி அவர் விமர்சித்தார்.

Next Story