காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக பளு தூக்கும் வீராங்கனைக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து


காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற  தமிழக பளு தூக்கும் வீராங்கனைக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 19 July 2019 8:01 AM GMT (Updated: 19 July 2019 8:01 AM GMT)

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக பளு தூக்கும் வீராங்கனைக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் வாரப்பூர் ஊராட்சி நெம்மேலிப்பட்டி கிராமம் பவுன்ராஜ்-ராணி தம்பதியரின் மகள் ப.அனுராதா 2019-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு தமிழகத்தில் முதல் பெண்மணியாக தங்கம் வென்றுள்ளார்.

87 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டு ஸ்னாச் முறையில் 100 கிலோவும், ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ முறையில் 121 கிலோ என்ற நிலையில் மொத்தம் 221 கிலோ எடை தூக்கி தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளார். அவருக்கு, என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story