சென்னையில் பெட்ரோல் விலை 5 காசுகள் குறைவு


சென்னையில் பெட்ரோல் விலை 5 காசுகள் குறைவு
x
தினத்தந்தி 27 July 2019 1:36 AM GMT (Updated: 27 July 2019 1:36 AM GMT)

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 காசுகள் குறைந்து இன்று விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப மாதமிருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து விற்றன.  இதன்பின், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது.  கடந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.

இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் குறைந்து ரூ.76.06க்கு விற்பனை செய்யப்படுகிறது.  டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி ரூ.69.90க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Next Story