அதிமுகவை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது - ஆம்பூரில் முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம்


அதிமுகவை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது - ஆம்பூரில் முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம்
x

அதிமுகவை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது என்று ஆம்பூரில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வேலூர்,

ஆம்பூரில் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி,

அதிமுகவை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது. திமுகவில் வாரிசு அரசியல் தொடர்கிறது, ஆனால் நாங்கள் உழைத்து தான் மேலே வந்திருக்கிறோம்.  திமுக ஒரு குடும்ப கட்சி, அதிமுகவில் அனைவரும் ஒரே குடும்பம். 

100 நாள் வேலைத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.  படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுத்து பின்னர், படித்து முடித்த மாணவர்களுக்கு கொடுக்கப்படும்.

அதிமுகவில் வாரிசு இல்லை; யாரும் பொறுப்புக்கு வரலாம். சொன்னசொல்லை விவசாயிகள் காப்பாற்றுவார்கள்; நான் உள்பட பல அமைச்சர்களும் விவசாயிகள்தான்' என்றும் முதலமைச்சர் பழனிசாமி பேசியுள்ளார்.

Next Story