தங்கம் விலை பவுனுக்கு ரூ.88 உயர்வு


தங்கம் விலை பவுனுக்கு ரூ.88 உயர்வு
x
தினத்தந்தி 8 Aug 2019 6:45 PM GMT (Updated: 8 Aug 2019 5:17 PM GMT)

தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதிகளவில் உயர்ந்து கொண்டே வருகிறது.

சென்னை, 

தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதிகளவில் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த 1–ந் தேதியில் இருந்து இதுவரை கிராமுக்கு ரூ.248–ம், பவுனுக்கு ரூ.1,984–ம் அதிகரித்துள்ளது. நேற்றும் விலை உயர்ந்து தான் இருந்தது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 547–க்கும், ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்து 376–க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.11–ம், பவுனுக்கு ரூ.88–ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 558–க்கும், ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்து 464–க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் அதிகரித்து வருகிறது. நேற்று கிராமுக்கு 80 காசும், கிலோவுக்கு ரூ.800–ம் உயர்ந்து, ஒரு கிராம் 47 ரூபாய் 60 காசுக்கும், ஒரு கிலோ ரூ.47 ஆயிரத்து 600–க்கும் விற்பனை ஆனது.

Next Story