மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் 100 பேருக்கு எடைகுறைப்பு அறுவை சிகிச்சை ‘ஜெம்’ ஆஸ்பத்திரியில் நடந்தது + "||" + In the Chief-Minister Insurance Plan Weight for 100 people surgery

முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் 100 பேருக்கு எடைகுறைப்பு அறுவை சிகிச்சை ‘ஜெம்’ ஆஸ்பத்திரியில் நடந்தது

முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் 100 பேருக்கு எடைகுறைப்பு அறுவை சிகிச்சை ‘ஜெம்’ ஆஸ்பத்திரியில் நடந்தது
முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் 100 பேருக்கு எடைகுறைப்பு அறுவை சிகிச்சை ‘ஜெம்’ ஆஸ்பத்திரியில் நடந்தது
சென்னை,

சென்னை பெருங்குடியில் செயல்படும் ‘ஜெம்’ ஆஸ்பத்திரியில், தமிழக முதல்-அமைச்சர் சுகாதார காப்பீட்டு திட்டத்தின்கீழ் 100-க்கும் மேற்பட்டோருக்கு எடை குறைப்பு அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடந்துள்ளன. இதையொட்டி நடந்த பயனாளிகள் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றனர். 50-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்துகொண்டனர்.


அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது, “முதல்-அமைச்சர் சுகாதார காப்பீட்டு திட்டத்தின்கீழ் எடை குறைப்பு அறுவை சிகிச்சைகள் செயல்படுத்தப்படுவதை அங்கீகரித்த ஒரே மாநிலம் தமிழகம் தான்” என்று குறிப்பிட்டார்.

ஜெம் ஆஸ்பத்திரி எடைகுறைப்பு அறுவை சிகிச்சைத்துறை தலைவர் டாக்டர் பிரவீன்ராஜ் பேசுகையில், “எடை குறைப்பு என்பது லேப்ராஸ்கோபிக் முறையில் செய்யப்படும் சிகிச்சை. உடல் பருமன் பிரச்சினைகளால் உயிர் பாதிப்பு ஏற்படும் அபாயகரமான கட்டத்தில் எடை குறைப்பு அறுவை சிகிச்சை மிகவும் தேவையானது. தமிழகத்தில் தான் முதன்முறையாக முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் இதுபோன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. பிற மாநிலங்களிலும் இத்திட்டத்தை கொண்டுவர முயற்சிக்கிறார்கள்’ என்றார்.