சுதந்திரதின விழாவையொட்டி தமிழக போலீசார் 23 பேருக்கு ஜனாதிபதி விருது


சுதந்திரதின விழாவையொட்டி தமிழக போலீசார் 23 பேருக்கு ஜனாதிபதி விருது
x
தினத்தந்தி 14 Aug 2019 11:44 PM GMT (Updated: 14 Aug 2019 11:44 PM GMT)

சுதந்திர தின விழாவையொட்டி தமிழகத்தை சேர்ந்த 23 போலீசாருக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின விழாவையொட்டி ஆண்டுதோறும் சிறப்பாக பணியாற்றும் போலீசாருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி தமிழக காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 23 போலீசாருக்கு ஜனாதிபதி விருதை மத்திய அரசு நேற்று அறிவித்தது.

இந்த பட்டியலில் இடம்பெற்றவர்கள் விவரம் வருமாறு:-

1. சங்கர் ஜிவால் - தமிழ்நாடு ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி., 2. சபரிநாதன் - கோவை போலீஸ் பயிற்சி பள்ளி சப்-இன்ஸ்பெக்டர், 3. ஜெயச்சந்திரன் - மதுரை தமிழ்நாடு சிறப்பு காவல்படை 6-வது பட்டாலியன் கமாண்டர்

4. யாகூப் - சென்னை கியூ பிரிவு டி.எஸ்.பி., 5. உன்னிகிருஷ்ணன் - ராமநாதபுரம் லஞ்சஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., 6. திருமால் - திண்டிவனம் டி.எஸ்.பி.,

7. கிருஷ்ணராஜன் - கிருஷ்ணகிரி லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி., 8. லவகுமார் - சென்னை லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி., 9. தட்சிணாமூர்த்தி - ஊட்டி லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி.

10. கோவிந்தராஜூ - சென்னை ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல்படை 5-வது பட்டாலியன் உதவி கமாண்டர், 11. அருள்மணி - மாநில உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் சென்னை, 12. பரவாசுதேவன் - புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர்

13. தாமஸ் ஜேசுதாசன் - சென்னை சென்டிரல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர், 14. சீனிவாசன் - சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர், 15. சவுந்திரராஜன் - செங்கல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்

16. பாலச்சந்தர் - சேலம் நகர மாநில உளவுப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர், 17. மல்லிகா - சென்னை மத்திய குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர், 18. பன்னீர்செல்வம் - கடலூர் லஞ்சஒழிப்பு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்

19. சன்னி சக்காரியா - சென்னை பாதுகாப்பு புலனாய்வுப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், 20. சாகுல் ஹமீது - கோவை லஞ்சஒழிப்பு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், 21. குமாரவேலு - சென்னை பாதுகாப்பு புலனாய்வுப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்.

22. ராஜா - மாநில உளவுப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் (தஞ்சாவூர்), 23. சோனை - மதுரை நகர திலகர் திடல் போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்.


Next Story