தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியர்கள் கொடியேற்றி வைத்தனர்


தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியர்கள் கொடியேற்றி வைத்தனர்
x
தினத்தந்தி 15 Aug 2019 7:05 AM GMT (Updated: 15 Aug 2019 8:11 AM GMT)

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியர்கள் கொடியேற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டனர்.

சென்னை

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தேசியக் கொடியேற்றினார். சிறந்த காவலர்கள், அரசு ஊழியர்களுக்கு விருது வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபா தேசிய கொடியேற்றி தியாகிகளுக்கு கதராடை வழங்கி கவுரவித்தார்

மதுரை மாவட்ட ஆட்சியர் ராஜசேகர் தேசியக் கொடியேற்றி ஏற்றினார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தேசியக் கொடியேற்றினார். மாணவ மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. திறந்த ஜீப்பில் சென்று காவலர்களின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தேசிய கொடியேற்றிவைத்தார் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தேசியக் கொடியேற்றி அணிவகுப்பை பார்வையிட்டார் தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராஜ் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். மாணவ-மாணவிகளின் கலாச்சார கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா தேசியக் கொடியேற்றினார். அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தேசியக் கொடியேற்றிவைத்தார்.மாணவ மாணவிகளின் கலைநிகிழ்ச்சிகள் நடைபெற்றன

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தேசியகொடியேற்றினா. 50 பேருக்கு சிறந்த அலுவலர்களுக்கான நற்சான்றிதழ் வழங்கினார்

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி தேசிய கொடியேற்றினார். காவல்துறையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்

சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். பள்ளி-கல்லூரி மாணவ மாணவிகளின் கலாசார கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

Next Story