திமுக கண்டன ஆர்ப்பாட்டம்: பங்கேற்ற அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி - மு.க.ஸ்டாலின்


திமுக கண்டன ஆர்ப்பாட்டம்: பங்கேற்ற அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 22 Aug 2019 3:46 PM GMT (Updated: 22 Aug 2019 3:46 PM GMT)

டெல்லியில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைத்து அரசியல் தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை,

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை வழங்கிய சட்டப்பிரிவுகளை நீக்கியதை கண்டித்தும், இன்று வரை அம்மாநில முன்னாள் முதல்வர்கள் வீட்டுக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிராக டெல்லியில் இன்று (ஆக.22) திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- 

ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்க காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனே விடுவிக்க வலியுறுத்தி திமுக ஏற்பாட்டில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைத்து அரசியல் தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி! என பதிவிட்டுள்ளார்.

Next Story