மாநில செய்திகள்

3 மாதமாகியும் பயண அட்டை வழங்கப்படவில்லை - மாணவர்கள் இலவசமாக பயணிப்பதில் சிக்கல் + "||" + No travel card issued for 3 months Problem with students traveling for free Buspass

3 மாதமாகியும் பயண அட்டை வழங்கப்படவில்லை - மாணவர்கள் இலவசமாக பயணிப்பதில் சிக்கல்

3 மாதமாகியும் பயண அட்டை வழங்கப்படவில்லை - மாணவர்கள் இலவசமாக பயணிப்பதில் சிக்கல்
பள்ளிகள் திறந்து 3 மாதங்களாகியும், ஸ்மார்ட் கார்ட் வடிவிலான பேருந்து பயண அட்டை வழங்கப்படாததால் மாணவர்கள் இலவசமாக பயணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை,

பேருந்து பயண அட்டை வழங்கப்படும் வரை, பள்ளி சீருடை அணிந்த மாணவர்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும் என நடத்துனர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. 

அதையும் மீறி ஒரு சில நடத்துநர்கள், சீருடை அணிந்த மாணவர்களை பேருந்தில் இலவசமாக பயணிக்க அனுமதிப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. ஒரு சில நடத்துனர்களின் செயலால் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஏழை எளிய மாணவர்கள் தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாகுவதாக கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, அனைத்து நடத்துனர்களின் கவனத்திற்கு இந்த விஷயத்தை அறிவுறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

மேலும், உடனடியாக இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.