விஜயகாந்துக்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து


விஜயகாந்துக்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து
x
தினத்தந்தி 25 Aug 2019 9:30 AM GMT (Updated: 25 Aug 2019 9:30 AM GMT)

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்துக்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ் திரையுலகிலும், அரசியலிலும் களம் கண்ட, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது 67வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.  விஜயராஜ் என்ற இயற்பெயர் கொண்ட அவர் திரைத்துறையில் விஜயகாந்த் என்ற பெயரில் காலடி எடுத்து வைத்து முன்னேறினார்.  இந்த பெயர் அவருக்கு கை கொடுத்தது.

கடந்த 1979வது ஆண்டில் இனிக்கும் இளமை என்ற படத்தில் நடிக்க தொடங்கி வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோயில் கிழக்காலே, புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர், வானத்தை போல என பல வெற்றி படங்களை வழங்கினார்.  கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்ததற்கு பின்பு அவர் ரசிகர்களால் கேப்டன் என அழைக்கப்பட்டார்.

இதன்பின்னர் கடந்த 2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்து பல முன்னேற்றங்களை கண்டார்.  

இன்று 67வது பிறந்த நாள் கொண்டாடும்  தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில்,  தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி பூங்கொத்துடன் பிறந்தநாள் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார்.  

அதில், "கலை ஆர்வம் மிக்கவராய் திரைத்துறையில் தனி முத்திரை பதித்தவர் விஜயகாந்த், தொடர்ந்து மக்கள் பணியாற்றும் வண்ணம் அனைத்து வளமும், நலமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்"  என குறிப்பிட்டுள்ளார். 

Next Story