இந்தியாவிலேயே சிறப்பான மாநிலங்களுக்கான விருதுகளை அதிகம் பெற்றுள்ளோம்; அமைச்சர் வேலுமணி


இந்தியாவிலேயே சிறப்பான மாநிலங்களுக்கான விருதுகளை அதிகம் பெற்றுள்ளோம்; அமைச்சர் வேலுமணி
x
தினத்தந்தி 26 Aug 2019 1:16 PM GMT (Updated: 2019-08-26T18:46:23+05:30)

இந்தியாவிலேயே சிறப்பான மாநிலங்களுக்கான விருதுகளை அதிகம் பெற்றுள்ளோம் என அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

புதுடெல்லிக்கு சென்றுள்ள தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசும்பொழுது, தமிழகத்தில் மழைநீர் சேமிப்பு திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.  சென்னையில் உள்ள 210 ஏரிகள் மேம்படுத்தப்படும்.  கூடுதலாக 1 டி.எம்.சி. நீரை சேமிக்க திட்டமிட்டுள்ளோம்.

இந்தியாவிலேயே சிறப்பான மாநிலங்களுக்கான விருதுகளை அதிகம் பெற்றுள்ளோம்.  கோவையிலிருந்து டெல்லி மற்றும் துபாய்க்கு விமான சேவை தொடங்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

தமிழகத்தின் மீது நிர்மலா சீதாராமன் அதிக அக்கறையோடு உள்ளார் என்று கூறினார்.

Next Story