அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து கொண்டிருக்கிறார்கள் “அ.தி.மு.க.வை வீழ்த்தும் சக்தி எந்த கட்சிக்கும் இல்லை” எடப்பாடி பழனிசாமி பேச்சு


அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து கொண்டிருக்கிறார்கள் “அ.தி.மு.க.வை வீழ்த்தும் சக்தி எந்த கட்சிக்கும் இல்லை” எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 26 Aug 2019 11:15 PM GMT (Updated: 2019-08-27T02:42:07+05:30)

அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்ட அ.ம.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள்  எம்.எல்.ஏ.வுமான வாசுதேவன் தலைமையில் திருப்போரூர் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 3,000-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இதையடுத்து காஞ்சீபுரம் மத்திய மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது.

கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ‘அ.தி.மு.க.வை வீழ்த்தக்கூடிய சக்தி எந்த கட்சிக்கும் இல்லை என்ற சூழ்நிலையை உருவாக்கும் விதமாக அபரிமிதமான வளர்ச்சியை எட்டிக்கொண்டு இருக்கிறோம். நமது இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள் தான் இப்போது அழிந்து போய்க்கொண்டிருக்கும் காட்சியை பார்த்து கொண்டிருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைப்பு செயலாளர் சி.பொன்னையன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story