தை மாதம் வழங்கப்படும் திருவள்ளுவர் திருநாள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அழைப்பு


தை மாதம் வழங்கப்படும் திருவள்ளுவர் திருநாள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அழைப்பு
x
தினத்தந்தி 29 Aug 2019 7:03 PM GMT (Updated: 2019-08-30T00:33:55+05:30)

தை மாதம் வழங்கப்படும் திருவள்ளுவர் திருநாள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை, 

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழ் அறிஞர்களையும் தமிழுக்கு தொண்டாற்றுகிறவர்களையும் சிறப்பிக்கும் வகையில் தை மாதம் திருவள்ளுவர் திருநாளில் பல விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவம் தமிழ் வளர்ச்சி துறையின் www.tam-i-lv-a-l-a-r-c-h-it-hu-r-ai.com என்ற வலைத்தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிப்பவர்கள் தன்விவர குறிப்புகளுடன் 2 புகைப்படம், தாங்கள் எழுதிய நூல்களின் பெயர் பட்டியலுடன் அந்நூல்களில் ஒருபடி வீதம் ‘தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் வளர்ச்சி வளாகம், முதல் தளம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை-600 008’ என்ற முகவரிக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். (தொலைபேசி எண் 044-28190412, 044-28190413, மின்னஞ்சல் முகவரி: tam-i-lv-a-l-a-r-c-h-it-hu-r-ai@gm-a-il.com ).

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story