விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு ஹோமம்


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு ஹோமம்
x
தினத்தந்தி 30 Aug 2019 10:15 PM GMT (Updated: 30 Aug 2019 7:34 PM GMT)

வடபழனி முருகன் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு ஹோமம் நடத்தப்படுகிறது.

சென்னை, 

சென்னை வடபழனி முருகன் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு ஹோமம், பூஜைகள் நடத்தப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தி அன்று காலை, 9 மணி முதல் 10.30 மணி வரை சிறப்பு ஹோமம் நடத்தப்படுகிறது. இந்த ஹோமத்தில் பக்தர்கள் தங்களது பெயர், நட்சத்திரம் குறித்து முன்பதிவு செய்து பங்கேற்கலாம்.

கணபதி ஹோமத்தில் பூஜிக்கப்பட்ட விநாயகர் விக்ரகம், கொழுக்கட்டை பிரசாதமாக வழங்கப்படும். சிறப்பு ஹோமத்தில் கலந்து கொள்ள ரூ.150 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கச்சேரி

செப்டம்பர் 2-ந்தேதி மாலை 6 மணிக்கு, காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்வானும், மாண்டலின் சீனிவாசனின் சகோதரருமான மாண்டலின் ராஜேஷ் குழுவினரின் இன்னிசை கச்சேரி நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு சுவாமி புறப்பாடு நடக்க உள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், துணை கமிஷனர் கே.சித்ராதேவி ஆகியோர் செய்துள்ளனர்.

Next Story