லண்டன் தாவரவியல் பூங்காவை முதலமைச்சர் பழனிசாமி பார்வையிட்டார்
லண்டனில் புகழ்பெற்ற 'கேஇடபிள்யூ' தாவரவியல் பூங்காவை முதலமைச்சர் பழனிசாமி பார்வையிட்டார்.
லண்டன்,
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 14 நாள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் பழனிசாமி வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், லண்டனில் உள்ள புகழ்பெற்ற 'கேஇடபிள்யூ' தாவரவியல் பூங்காவை முதலமைச்சர் பழனிசாமி பார்வையிட்டார். அப்போது பாலைவனம், குளிர் பகுதியில் வளரும் தாவரங்களின் வளர்ப்பு, பராமரிப்புமுறை குறித்தும் கேட்டறிந்தார்.
தாவரங்களை வேளாண் ஆராய்ச்சிக்காக எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் முதலமைச்சர் கேட்டறிந்தார். இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய்க்கு பயணம் செய்யவுள்ள முதலமைச்சர் தற்போது லண்டனில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story