மாநில செய்திகள்

"முதலீடுகளை மட்டுமா ஈர்த்தாய் மக்கள் மனதையும் அல்லவா ஈர்த்தாய்" - முதலமைச்சரை வாழ்த்தி பூங்குன்றன் கவிதை + "||" + Congratulations to the Chief Minister Poetry poonguntran

"முதலீடுகளை மட்டுமா ஈர்த்தாய் மக்கள் மனதையும் அல்லவா ஈர்த்தாய்" - முதலமைச்சரை வாழ்த்தி பூங்குன்றன் கவிதை

"முதலீடுகளை மட்டுமா ஈர்த்தாய் மக்கள் மனதையும் அல்லவா ஈர்த்தாய்" - முதலமைச்சரை வாழ்த்தி பூங்குன்றன் கவிதை
வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடிந்து, முதலமைச்சர் திரும்பி உள்ள நிலையில், அவரை வரவேற்று, பூங்குன்றன் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை,

ஜெயலலிதா மறைந்த பிறகு, அவரது உதவியாளரான பூங்குன்றன், அரசியலில் இருந்து விலகி ஆன்மிகத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், தற்போது முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து கவிதை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், முதலீடுகளை மட்டுமா ஈர்த்தாய்; மக்கள் மனதையும் அல்லவா ஈர்த்தாய், அயல்நாட்டிற்கே சென்றாலும், கன்றுக்கு உணவூட்டி விவசாயி நானென்றாய், ஆங்கில நாட்டிற்கே சென்றாலும்; தமிழில் உரை நிகழ்த்திய அம்மாவின் மாணவனே ! தமிழனாய் உனை வரவேற்கிறேன் என முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை வரவேற்கும் விதமாக குறிப்பிட்டுள்ளார்.

சசிகலாவால் போயஸ் கார்டனுக்கு அழைத்து வரப்பட்டவர் பூங்குன்றன் என்பது குறிப்பிடத்தக்கது. பூங்குன்றனின் தந்தை புலவர் சங்கரலிங்கமும் ஜெயலலிதாவிடம் பணியாற்றி அவரது நன்மதிப்பை பெற்றவர் ஆவார்.

தொடர்புடைய செய்திகள்

1. தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் முதல்-அமைச்சர் உத்தரவு
தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார்.
2. 15 நாள் பயணமாக சென்னை வருகை: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு முதல்-அமைச்சர் வரவேற்பு
15 நாள் பயணமாக தனி விமானம் மூலம் சென்னை வந்த துணை ஜனாதிபதியை முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
3. தாமிரபரணி உபரிநீரை வைப்பாறு கொண்டு செல்ல ரூ.254 கோடியில் புதிய திட்டம் முதல்-அமைச்சர் அறிவிப்பு
தாமிரபரணி உபரிநீரை வைப்பாறு கொண்டு செல்ல ரூ.254 கோடியில் புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
4. தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.367¾ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் முதல்-அமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.367¾ கோடி வளர்ச்சி திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
5. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி சாலையை சுத்தம் செய்யும் பணி
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி ஊட்டியில் சாலையை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.