பெட்ரோல், டீசல் விலை இன்று ( செப்.13) உயர்வு


பெட்ரோல், டீசல் விலை இன்று ( செப்.13) உயர்வு
x
தினத்தந்தி 13 Sep 2019 2:52 AM GMT (Updated: 13 Sep 2019 2:52 AM GMT)

பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.74.70 ஆக விற்பனையாகிறது.

சென்னை, 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலரவப்படி இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணையிக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. 

அந்த  வகையில், இன்று  எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 7 காசு அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.74.70 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 9 காசு அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.68.99 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.


Next Story