மாநில செய்திகள்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு + "||" + In TamilNadu Mild to moderate Opportunity for rain

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை

சென்னை மண்டல வானிலை மையம் கூறி உள்ளதாவது:-

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது

மதுரை,சிவகங்கை, அரியலூர்,பெரம்பலூர், தஞ்சாவூர்,திருவாரூர், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி,மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் ஆர்.கே பேட்டை, பள்ளிப்பட்டு, நீலகிரி மாவட்டம் தேவாலா உள்ளிட்ட இடங்களில் தலா 7 சென்டி மீட்டரும், வேலூர் சோளிங்கர், நீலகிரி கூடலூர் பஜார், காஞ்சிபுரம் நகர் பகுதிகளில் தலா 6 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மாலை அல்லது இரவில் நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பம் பதிவாகும் என கூறியுள்ளது.