பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்வு


பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்வு
x
தினத்தந்தி 20 Sep 2019 2:06 AM GMT (Updated: 20 Sep 2019 2:06 AM GMT)

பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வது வாகன ஓட்டிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, 

பெட்ரோல்-டீசல் விலையில் இந்த மாதம் தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை. முதல் 4 நாட்களுக்கு பிறகு 5-ந் தேதி விலை சற்று அதிகரித்தது. அதன் பின்னர், விலை சரிந்தது. இந்தநிலையில் கடந்த 9-ந் தேதிக்கு பிறகு தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்றும் விலை அதிகரித்து இருந்தது.

சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய் 26 காசுக்கும், டீசல் 69 ரூபாய் 57 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, பெட்ரோல் லிட்டருக்கு 30 காசும், டீசல் 20 காசும் உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய் 56 காசுக்கும், டீசல் 69 ரூபாய் 77 காசுக்கும் விற்பனை ஆனது. 

இந்த நிலையில், தொடர்ந்து  10 நாட்களாக  பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர்.  இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 37 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.75.93 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 30 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.70.07 ஆகவும் உள்ளது.


Next Story