14 புதிய பாலங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்


14 புதிய பாலங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 26 Sep 2019 10:59 AM GMT (Updated: 2019-09-26T16:29:08+05:30)

நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் 35 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 14 புதிய பாலங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

சென்னை

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை, திருச்சி, திண்டுக்கல், தூத்துக்குடி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் 14 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த 14 பாலங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி- பண்ணாரி சாலையில், பவானிசாகரில் பவானியாற்றின் குறுக்கே 7 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள உயர்மட்டப் பாலத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

சென்னை எல்லைச் சாலை திட்டத்திற்கான நிலயெடுப்புப் பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 5 ஜீப்புகளையும் அந்த அலுவலர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி, தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story