சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசியவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு


சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசியவர் மின்சாரம் தாக்கி  உயிரிழப்பு
x
தினத்தந்தி 27 Sep 2019 3:31 AM GMT (Updated: 2019-09-27T09:01:08+05:30)

பள்ளிபாளையம் அருகே சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசியவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் செல்போனை சார்ஜரில் போட்டு கொண்டே போன் பேசியுள்ளார். 

அப்போது மின் கசிவு ஏற்பட்டதால் மின்சாரம் தாக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story