இந்தி மொழி டயாபருடன் இருக்கும் சிறிய குழந்தை - கமல்ஹாசன்


இந்தி மொழி டயாபருடன் இருக்கும் சிறிய குழந்தை - கமல்ஹாசன்
x
தினத்தந்தி 4 Oct 2019 11:04 AM IST (Updated: 4 Oct 2019 11:04 AM IST)
t-max-icont-min-icon

இந்தி மொழி டயாபருடன் இருக்கும் சிறிய குழந்தை. அதையும் நாம் கவனித்துக் கொள்ள வேண்டும் என்கிற அக்கறையில் சொல்கிறேன் என்று கமல்ஹாசன் கூறினார்.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 500 மாணவிகளுக்கு மாதவிடாய் கால பெட்டகங்களை வழங்கும் நிகழ்ச்சி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு மாணவிகளுக்கு பெட்டகங்களை வழங்கினார். ஒவ்வொரு பெட்டகத்திலும் 96 சானிடரி நாப்கின்கள், 6 பருத்தி உள்ளாடைகள் என ஒரு ஆண்டுக்கான பொருட்கள் இருந்தன.

பின்னர் அவர் அளித்த பேட்டியில் இந்தி திணிப்பு பற்றி கூறியதாவது:-

‘இந்தி மொழி டயாபருடன் இருக்கும் சிறிய குழந்தை. தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கை ஒப்பிடும்போது, இந்தி மொழி இன்னும் இளைய மொழி தான். இதை நான் கேலியாக  கூறவில்லை. அதையும் நாம் கவனித்துக் கொள்ள வேண்டும் என்கிற அக்கறையில் சொல்கிறேன். அதற்காக அதை திணிக்கக் கூடாது. கழுத்தில் கட்டிவிடக்கூடாது என கூறினார்.

இந்தி திணிப்பால்  ஏற்படும் போராட்டம் ‘ஜல்லிக்கட்டு’ போராட்டத்தை விட “அதிவேகமாக பெரியதாக” இருக்கும். ஒரு போருக்கு வழிவகுக்கும்

நாங்கள் முன்பே சொல்லியிருக்கிறோம், மீண்டும் சொல்வோம், தமிழ் மொழி எங்கள் பெருமை, அதற்காக நாங்கள் போராடுவோம். பன்முகத்தன்மையின் ஒற்றுமை என்பது இந்தியாவை ஒரு ஜனநாயக  நாடாக மாற்றியபோது நாங்கள் அளித்த வாக்குறுதியாகும். அதை நாம் மாற்ற முடியாது.

இப்போது ஷா, சுல்தான் அல்லது சாம்ராட் ஆகியோர் தங்கள் வாக்குறுதியை மீறி செல்லக்கூடாது. நாங்கள் எல்லா மொழிகளையும் மதிக்கிறோம், ஆனால் எங்கள் தாய் மொழி எப்போதும் தமிழாகவே இருக்கும்  என கமல்ஹாசன் கடந்த  செப்டம்பர் 16ந்தேதி கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story