அதிமுக கட்சியையும்,ஆட்சியையும் காப்பாற்ற சிப்பாய்களாக செயல்படுவோம் - புகழேந்தி
அதிமுக கட்சியையும்,ஆட்சியையும் காப்பாற்ற சிப்பாய்களாக செயல்படுவோம் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.
கோவை,
டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய கோவை மண்டல அமமுக கூட்டத்தில் தீர்மானம் எடுத்துள்ளதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.
கோவையில் புகழேந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
18 எம்.எல்.ஏ.க்கள் பதவி இழக்க காரணமாக இருந்த தினகரன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாவிட்டால் அமமுக சகாப்தம் முடிவுக்கு வரும்.
அதிமுக கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற சிப்பாய்களாக செயல்படுவோம். கட்சி ஆரம்பித்ததால் தான் தினகரன் வீழ்ந்தார். தினகரனிடம் எந்த ஸ்லீப்பர் செல்லும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story