சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம்: ஜெயகோபால் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு இன்று விசாரணை


சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம்: ஜெயகோபால் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு இன்று விசாரணை
x

பேனரால் சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் ஜெயகோபால் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

சென்னை,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் சுபஸ்ரீ,  ‘பேனர்’ விழுந்து பலியான சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  

இந்த சம்பவம் தொடர்பாக, அனுமதி இன்றி பேனர் வைத்ததாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால்  மீது மாநகராட்சி உதவி பொறியாளர் அளித்த புகாரின்பேரில், பொது இடத்தில் அனுமதியின்றி பேனர் வைத்து இடையூறு செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதனையடுத்து, பேனர் விவகாரத்தில் கைதான அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். ஜெயகோபாலின் உறவினரான மேகநாதனும் ஜாமீன் கோரி மனு அளித்துள்ளார். 

இரண்டு பேரின் ஜாமீன் மனு, சென்னை ஐகோர்ட்  நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது. இதற்கு முன்னதாக செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததால் தற்போது சென்னை ஐகோர்ட்டை நாடி உள்ளனர்.


Next Story