சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசி பெண் வழக்கறிஞர் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு: பழிக்குப்பழி தீர்க்க கொலை முயற்சி


சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசி  பெண் வழக்கறிஞர் மீது  நாட்டு வெடிகுண்டு வீச்சு: பழிக்குப்பழி தீர்க்க கொலை முயற்சி
x
தினத்தந்தி 10 Oct 2019 8:15 AM GMT (Updated: 10 Oct 2019 11:34 AM GMT)

சென்னை ரிச்சி தெருவில் அரிவாளால் வெட்டியும், நாட்டு வெடிகுண்டு வீசியும் பெண் வழக்கறிஞரை கொல்ல முயற்சி.


சென்னை

சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றுபவர் மலர்விழி(50). இன்று மதியம் எழும்பூர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்பாக ஆஜராகிவிட்டு அண்ணா சாலை நோக்கி ஆட்டோவில் மலர்கொடி(50) வழக்கறிஞர் அழகுராஜா (31) மணிகண்டன்(19) விஜயகுமார்(30) ஆகியோர் வந்துக்கொண்டிருந்தனர்.

சென்னை அண்ணா சாலை ஆதித்தனார் சாலையை இணைக்கும் பிளாக்கர்ஸ் சாலை கேசினோ திரையரங்கம் அருகே வரும்போது. அப்போது எதிர்புறமாக ஆட்டோவில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் ஆட்டோவை வழிமறித்து அழகுராஜாவை வெட்டியுள்ளனர்.

உடன் இருந்த ஆறுமுகத்துக்கும் வெட்டு விழுந்தது. இதில் தடுக்க முயன்ற மலர்கொடிக்கும் வெட்டு விழுந்தது. அப்போது அந்த நேரத்தில் அழகுராஜா ஆட்டோவில் இருந்த நாட்டு வெடிகுண்டை அவர்களை நோக்கி எறிய அது பலத்த சத்தத்துடன் ஆட்டோமீது விழுந்து வெடித்துள்ளது.

குண்டு பலத்த சத்ததுடன் வெடித்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் சிதறி ஓடினர். அழகுராஜாவை வெட்டிய கும்பலும் தப்பி ஓடியது. பரபரப்பான சூழ்நிலையில் தலையில் வெட்டுக் காயம்பட்ட அழகுராஜா, காதருகே காயம்பட்ட மலர்கொடி, கையில் காயமடைந்த் ஆறுமுகம் ஆகிய மூவரையும் பொதுமக்கள் மீட்டு அவர்களை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அழகுராஜா தன்னுடன் ஆட்டோவில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து வந்துள்ளதும், அதில் வெடிக்காத ஒரு நாட்டுவெடிகுண்டு ஆட்டோவில் இருந்ததையும் சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் கைப்பற்றினர். மேலும் அந்த நேரத்தில் தப்பி ஓடிய அரவிந்தன், அப்பு ஆகிய இருவரை அங்கு நின்றிருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் பிடித்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் ஆட்டோவில் அழகுராஜாவுடன் வந்த மணிகண்டன், விஜயகுமார் ஆகிய 2 பேரையும் போலீஸார் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். போலீஸார் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டதில் இரண்டு விதமான கருத்து வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22-ம் தேதி பெசன்ட் சாலையில் காங்கிரஸ் பிரமுகர் அப்பாஸ் என்பவர் ஒரு கும்பலால் வெட்டிக்கொல்லப்பட்டார்.

இந்த கொலையின் பின்னணியில் அழகு ராஜா இருந்ததாகவும் அதற்கு பழி வாங்கும் நோக்கில் அப்பாஸின் மைத்துனர் ஷேக் ஆட்களை ஏவி கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது. அதேப்போன்று அழகுராஜா இருக்கும் கட்சியின் பிரமுகருக்கும் அழகுராஜாவுக்கும் முன்பகை இருந்ததாகவும் அதற்காக அவர் ஆட்களை ஏவி இருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

சென்னைக்கு சீன அதிபர் நாளை வரும் நேரத்தில் கடுமையான பாதுக்காப்பு போடப்பட்ட நிலையில் ரவுடிகள் தங்களுக்குள் மோதிக்கொள்வதும், நாட்டு வெடிக்குண்டை தன்னுடன் எடுத்து வந்து அதை வீச் சண்டையிடுவதும் அனைத்தையும் கேலிக்குள்ளாக்கும் செயலாக பார்க்கப்படுகிறது.

நாட்டுவெடிகுண்டு கைப்பற்றப்பட்ட நிலையில் குண்டுவெடித்த இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து மாதிரிகளை எடுத்துச் சென்றனர். நாட்டுவெடிகுண்டை அழகுராஜா எங்கு வாங்கினார் அவருக்கு சப்ளை செய்தது யார் என போலீஸார் விசாரிக்க உள்ளனர். விரைவில் அழகு ராஜா வீட்டை சோதனையிட்டு மேலும் ஏதாவது நாட்டுவெடிகுண்டுகள் உள்ளதா? என சோதனையிட உள்ளனர்.

இந்த சம்பவத்தில் அழகுராஜா மற்றும் உடன் வந்தவர்கள் நாட்டுவெடிகுண்டு எடுத்து வந்ததும் அதை பயன்படுத்தியதாலும் கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது.

Next Story