இரவு விருந்தில் சீன அதிபருக்கு பரிமாற இருக்கும் தமிழக உணவு வகைகள்


இரவு விருந்தில் சீன அதிபருக்கு பரிமாற இருக்கும் தமிழக உணவு வகைகள்
x
தினத்தந்தி 11 Oct 2019 11:19 AM GMT (Updated: 11 Oct 2019 11:19 AM GMT)

இரவு உணவு விருந்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் ஒன்றாக கலந்து கொள்ள இருக்கின்றனர். சீன அதிபருக்கு பரிமாற இருக்கும் தமிழக உணவு வகைகள்.

சென்னை

சீன அதிபர் ஜி ஜின்பிங் சுமார் 2 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு  வருகை தந்தார். அவருக்கு பாரம்பரிய கலாசார நடனங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, அவர் கார் மூலம் கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஓட்டலுக்கு சென்றார்.

மாலை 4 மணியளவில் ஓட்டலில் இருந்து கார் மூலம் சீன அதிபர் மாமல்லபுரம் சென்றார். வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபரை வரவேற்கிறார். இதனை அடுத்து, இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்கள் ஆகியவற்றை பார்வையிடுகின்றனர். இதனை அடுத்து, அங்கு நடக்க உள்ள கலை நிகழ்ச்சியையும் கண்டுகளிக்க உள்ளனர்.

இரவு உணவு விருந்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் ஒன்றாக கலந்து கொள்ள இருக்கின்றனர். இரு தரப்பில் இருந்தும் 18 பேர் இந்த விருந்தில் பங்கேற்கின்றனர். இந்திய உணவு வகைகளுடன், தமிழக உணவுகளான தக்காளி ரசம், அரைச்சிவிட்ட சாம்பார், கடலை குருமா, கவன் அரிசி ஹல்வா ஆகியவை விருந்தில் இடம்பெற உள்ளன. தமிழக உணவுகளுடன், சீன உணவுகளும் இந்த 28 வகையான உணவுப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 

Next Story