மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டுரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி வழங்க ஏற்பாடு + "||" + In the ration shops Provision of essential items

தீபாவளி பண்டிகையை முன்னிட்டுரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி வழங்க ஏற்பாடு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டுரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி வழங்க ஏற்பாடு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
சென்னை,

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கு.கோவிந்தராஜ் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகை 27-ந் தேதி கொண்டாடப்பட உள்ளதால், அனைத்து பொருட்களும் ஒரே நேரத்தில் குடும்ப அட்டைதாரர்கள் பெறுவதற்கு ஏதுவாக ரேஷன் கடைகளில் இருப்பு வைக்கப்பட வேண்டும். அதற்காக, வருகிற 18-ந் தேதிக்குள் அத்தியாவசிய மற்றும் சிறப்பு பொதுவினியோக திட்ட பொருட்கள் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் 100 சதவீதம் நகர்வு செய்யப்பட வேண்டும்.

இதனை செயல்படுத்த ஏதுவாக மாவட்ட நிர்வாகத்திடம் உரிய முன் அனுமதியை பெற்று 100 சதவீதம் நகர்வு பணியை முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே பெற்று செல்லும் வகையில் செயல் திட்டம் வகுத்து செயல்படுவதுடன், அனைத்து ரேஷன் கடைகளிலும் அத்தியாவசிய பொருட்கள் முழுமையாக இருப்பு உள்ளதை உறுதி செய்து கொள்ளவும்.

தட்டுப்பாடின்றி வழங்க ஏற்பாடு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் இருப்பின்மை காணப்பட்டால், உரிய விவரங்களுடன் மண்டல மேலாளர், மாவட்ட கலெக்டர் ஆகியோரை நேரில் அணுகி கிடங்குகளில் உரிய அளவு இருப்பு பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், இதர துறையினருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில், உரிய அளவில் சென்று சேர்வதை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், பொதுவினியோக திட்டத்தில் எவ்வித புகாருக்கும் இடமின்றி, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சிறப்பு பொதுவினியோக திட்ட பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் பச்சரிசி, பாமாயில் மற்றும் சர்க்கரை ஆகியவை இருப்பின்மையின்றி பேணப்படுவதையும், அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் தட்டுப்பாடின்றி பொருட்கள் வழங்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். பாமாயில் தேவை இருப்பின் கூடுதல் ஒதுக்கீடு கோரிப்பெற்று வழங்க ஏற்பாடு செய்யவும். அனைத்து ரேஷன் கடைகளும் அனைத்து வேலை நாட்களிலும் திறக்கப்பட்டு இருப்பதையும், பொருட்கள் வினியோகிக்கப்படுவதையும் உறுதி செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.