மாமல்லபுரத்தில் மோடி-ஜின்பிங் இடையே 1 மணி நேரம் பேச்சுவார்த்தை திட்டமிட்ட நேரத்துக்கு மேல் நீண்டதால் தாமதம்


மாமல்லபுரத்தில் மோடி-ஜின்பிங் இடையே 1 மணி நேரம் பேச்சுவார்த்தை திட்டமிட்ட நேரத்துக்கு மேல் நீண்டதால் தாமதம்
x
தினத்தந்தி 11 Oct 2019 11:15 PM GMT (Updated: 11 Oct 2019 9:51 PM GMT)

மாமல்லபுரத்தில் மோடி- ஜின்பிங் இடையே சுமார் 1½ மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. திட்டமிட்ட நேரத்தைவிட இந்த பேச்சுவார்த்தை நீண்டதால் அவர்களின் பயண திட்டத்தில் தாமதம் ஏற்பட்டது.

மாமல்லபுரம், 

மாமல்லபுரத்தின் பாரம்பரிய கலைச்சிற்பங்களை சுற்றிப்பார்த்த பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும், பின்னர் அங்கு நடந்த கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர். தொடர்ந்து சீன அதிபருக்கு அங்கேயே பிரதமர் மோடி இரவு விருந்து அளித்தார். பின்னர் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இரு தலைவர்களின் இரவு விருந்தும், பேச்சுவார்த்தையும் இரவு 8.10 மணிக்கு முடித்து, பின்னர் இருவரும் அவரவர் தங்கும் இடங்களுக்கு செல்வது என நிகழ்ச்சி நிரல் போடப்பட்டு இருந்தது.

வழியனுப்பினார்

ஆனால் மோடி-ஜின்பிங் இடையே நடந்த இந்த பேச்சுவார்த்தை 1½ மணி நேரத்துக்கும் மேலாக நீண்டது. இதனால் திட்டமிட்ட நேரத்தையும் தாண்டி 9.40 மணிக்குத்தான் இந்த நிகழ்வுகள் அனைத்தும் முடிவுபெற்றன.

இதனால் இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சீன அதிபர் ஜின்பிங் தாமதமாகவே கிண்டி ஓட்டலுக்கு திரும்பினார். அவரை வழியனுப்பி விட்டு பிரதமர் மோடியும் கோவளத்தில் அவர் தங்கிய ஓட்டலுக்கு திரும்பினார்.

Next Story