மாநில செய்திகள்

ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்து‘ஹாங்கி’ காரில் சென்ற ஜின்பிங் + "||" + Jinping, went to the Hongqi car

ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்து‘ஹாங்கி’ காரில் சென்ற ஜின்பிங்

ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்து‘ஹாங்கி’ காரில் சென்ற ஜின்பிங்
சீன அதிபர் ஜி ஜின்பிங் ‘ஹாங்கி’ காரில் சென்றார்.
பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நேற்று மாமல்லபுரத்தில் சந்தித்து பேசினார்கள். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடி அங்கிருந்து மாமல்லபுரத்துக்கு ஹெலிகாப்டரில் சென்றார். ஆனால் சீன தலைவர்கள் ஹெலிகாப்டரில் பறப்பதை தவிர்க்க வேண்டும் என்ற கொள்கை காரணமாக அதிபர் ஜின்பிங் சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு 57 கி.மீ. தூரம் தனது காரிலேயே பயணம் செய்தார்.

இதற்காக சீனாவில் இருந்து விமானத்தில் வரவழைக்கப்பட்டு இருந்த ‘ஹாங்கி’ என்ற சீனாவின் பிரபல சொகுசு காரை அவர் பயன்படுத்தினார். சீன கம்யூனிஸ்டு கட்சியின் நிறுவனரான மாசே துங் காலத்தில் இருந்தே அக்கட்சியின் தலைவர்கள் ஹாங்கி என்ற குண்டு துளைக்காத காரைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். ஹாங்கி என்றால் சீனாவின் மாண்டரின் மொழியில் செங்கொடி என்று அர்த்தம்.

சீன தலைவர்கள் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தக் கூடாது என்பது கிட்டத்தட்ட ஒரு சட்டம் போலவே கருதப்படுகிறது. அவர்கள் விமானம் மற்றும் கார்களைதான் பயன்படுத்துவார்கள். ஜி20 போன்ற பல நாட்டு தலைவர்கள் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கு மட்டும் ஹெலிகாப்டரில் செல்வார்கள் என்று சீன வெளியுறவு அமைச்சரக அதிகாரி ஒருவர் கூறினார்.